Links

ITNEWSFIRSTக்கு வரவேற்கின்றோம்

Wednesday, 18 August 2010

Grade 10 - System

தொகுதி என்றால் என்ன?
ஒரு குறித்த செயற்பாட்டை செய்ய அல்லது நோக்கத்தை அடைய ஒன்றுடன் ஒன்று இணைந்த வகையில் செயற்படுகின்ற பல்வேறுபட்ட உபதொகுதிகளின் இணைப்பே தொகுதி எனப்படுகின்றது.
இணைந்து செயற்படும் உப தொகுதிகள் ஒன்றில் ஒன்று தங்கியவையாக காணப்படும்.
உப தொகுதி என்றால் என்ன?
குறித்த தொகுதியில் காணப்படும் தொகுதியின் சிறு தொழிற்பாட்டை மேற்கொள்ளும் பிரிவூகள் இவையாகும்.
உதாரணமாக மனித உடலை தொகுதியாக கொண்டால் அது இயங்குவதற்கு அடிப்படையான சுவாசத் தொகுதி, நரம்புத் தொகுதி, சமிபாட்டுத் தொகுதி என்பன மனித உடல் எனும் தொகுதியின் உப தொகுதிகளாகும
தொகுதி வரையறை என்றால் என்ன?
ஒரு தொகுதி தொடர்புகொள்வது தனது சூழலுடன் ஆகும். எனவே தொகுதியையூம் அதன் சூழலையூம் வேறுபடுத்திக் காட்டுவது அதன் எல்லை ஆகும்.
தொகுதியின் எல்லையே தொகுதியூள் உள்ளவற்றையூம் தொகுதிக்கு வெளியே உள்ளவற்றையூம் பிரித்துக் காட்டும் பிரிகோடாகும்;.
தொகுதி எல்லை
தொகுதியொன்றின் மூலகங்கள்
நிறுவனமொன்றை தொகுதியாக கருதலாமா?
கருதலாம் ஏனெனில் நிறுவனத்தில் பிரதான இலக்கு, உபதொகுதிகள், உள்ளீடுகள், வெளியீடுகள், முறைவழியாக்கம் என்பன காணப்படுகின்றன.
மேலும் அவற்றுக்கு சூழல், சூழல் எல்லை என்பனவூம் காணப்படுகின்றன.
உதாரணமாக வைத்தியசாலை
Hospital
GOAL – CURE PATIENTS
SUB SYSTEMS – ECG UNIT, OPERATION THEATRE, WARDS
INPUT – PATIENT, DOCTORS, NURSES, MEDICINES
PROCESSING – EXAMING, SURGERY, INJECTING
OUTPUT – HEALTHY PEOPLE
மனிதவலு தகவல் முறைமை என்றால் என்ன?
தரவூ முறைவழியாக்கமானது தாள்களில் எழுதல், கணக்கு புத்தகங்களில் பதிதல், பதிந்த விபரங்களை இராக்கைகளில் அடுக்கி வைத்தல் போன்ற அமைப்புக்களில் காணப்படுமாயின் அது மனிதவலு தகவல் முறைமை என அழைக்கப்படும்.
உதாரணமாக பாடசாலையின் அலுவலகம்
வாசிக சாலை சுட்டிமுறை Library Index system
தகவல் தொகுதி என்றால் என்ன?

கணினி மையப்படுத்தப்பட்ட தகவல் முறைமை என்றால் என்ன?
ஒரு தொகுதி வன்பொருட்கள், மென்பொருட்கள், தரவூத்தளங்கள், தொடர்பாடல் வசதிகள், மனிதர்கள், செயற்பாடுகள் போன்றவற்றை உள்ளடக்கியது கணினி மையப்படுத்தப்பட்ட தகவல் முறைமை எனப்படும்.
உதாரணமாக பரீட்சை பெறுபேறுகள் வெளியிடல், தொலைபேசி கட்டணப்பட்டியல் தயாரித்தல்

செயன்வழிமுறையாக்கம் இரு வகைப்படும்
1. Batch Processing
ஒரு குறிப்பிட்ட காலம் வரை தரவூகள் சேகரிக்கப்பட்டு பின் ஒவ்வொரு தொகுதியாக செயன்முறையாக்கம் செய்யப்படும்
உதாரணமாக வானிலை தரவூகளை பல நாட்கள் சேகரித்து காலநிலை முடிவூகளை வெளியிடல
2.Online Processing
தரவூகள் சேகரிக்கப்படுவதுடன் சேர்த்து செயன்முறைக்குற்படுத்தப்படும்.
உதாரணமாக வங்கிகளில் உள்ள தன்னியக்க கூற்று இயந்திரங்கள் (ATM Machines).
தகவல் முறைமையின் வகைகள்
1. Office automation system (OAS)
2. Transaction processing system (TPS)
3. management information system (MIS)
4. processing control system (PCS)
1. Office automation system (OAS)
தரவூகளையூம் தகவல்களையூம் பயன்படுத்துகின்ற தொழிலாளர்களின் செயற்திரனை கூட்டுவதற்காக உருவாக்கப்பட்ட தொகுதிகள் இவையாகும்
உதாரணமாக: MS OFFICE
2. Transaction processing system (TPS)
தரவூகளை பெறல்இ செயன்முறைக்கு உற்படுத்தல்இ சேமித்து வைத்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளும் தகவல் தொகுதியாகும்.
இது வியாபாரமொன்றின் கீழ்மட்ட செயற்பாட்டு தொகுதியாக கருதப்படுகின்றது.
இதன் மூலம் உருவாக்கப்படும் முகாமை தரவூகள் அன்றாட கொடுக்கல் வாங்களின் விபரங்களை கொண்டிருக்கும். இவை கீழ்மட்ட முகாமையாளர்களுக்கு தேவையான விபரங்களாகும்.
இம்முறைமையானது தனது ஆதிக்க பகுதியில் மட்டுமே செயற்படும் உதாரணமாக நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவூஇ கணக்கீட்டுப் பிரிவூ, உற்பத்திப் பிரிவூ, போன்றவற்றுக்கு தனித்தனியான TPS காணப்படும்.
TPS ஒன்றின் பிரதான பகுதிகள்
Hardware (machine)

Software (Instruction)
People (Programmers, managers, user)
Procedures (rules)
Data and information
தன்னியக்க, மனிதவலு TPS வேறுபாடுகள்
Automated
வேகம் கூடியது
திருத்தமானது
செயற்திரன் மிக்கது
நம்பக தன்மை கூடியது
பல பாகங்களை கொண்டது
Manual
வேகம் குறைந்தது
திருத்தம் குறைவூ
செயற்திரன் குறைவூ
நம்பக தன்மை குறைவூ
சில பாகங்களை கொண்டது
Management information system (MIS)
தரவூகளை TPS இடம் இருந்து பெற்று அவற்றை தொகுத்து சுருக்கமான முகாமைத்துவ அறிக்கைகளாக மாற்றும் தொகுதியாகும்.
இதன் அறிக்கைகள் நடுத்தர மற்றும் செயற்பாட்டு முகாமையாளர்களுக்கு பயன்படும்.
processing control system (PCS)
இவை தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்களை கட்டுப்படுத்தும் முறைமைகளாகும்.
உதாரணமாக சீமேந்து தொழிற்சாலை, வாகன உற்பத்தி தொழிற்சாலை
போன்றவற்றில் காணப்படும் தொகுதிகள்
Intelligent information system(IS)
தேர்ச்சி பெற்ற மனித செயற்பாடுகளை மேற்கொள்ளும் கணினி அடிப்படையிலான பிரயோக அமைப்புக்களை கொண்ட தொகுதி இதுவாகும்.
உதாரணமாக மனிதனின் நோயை அறியூம் இயந்திரங்கள், நிதி எதிர்வூ கூறல்களை மேற்கொள்ளும் தொகுதிகள்
இவை Expert system  எனவூம் அழைக்கப்படும்.
system development life cycle தொகுதி விருத்தி வாழ்க்கை வட்டம்
இது தகவல் முறைமயொன்றின் உருவாக்க படிமுறைகளை குறிக்கும்
தொகுதி விருத்தி படிமுறைகள்
1. முறைமை புலனாய்வூ (Investigation )
2. முறைமை பகுப்பாய்வூ (Analysis)
3. முறைமை வடிவமைப்பு (Design)
4. பரீட்சித்தல் (Testing)
5. முன்வைத்த்ல (Implementation)
6. பராமரித்தல் (Maintain)

1 comment:

  1. jazakumullahu hairan.
    this will helpfull to all.
    if you want any support i will be proud.
    imran - galagedara

    ReplyDelete