Links

ITNEWSFIRSTக்கு வரவேற்கின்றோம்

Sunday 3 June 2012

பணிச்செயல் முறைமை


கணினியின் செயற்பாட்டை பொறுத்தவரையில் மென் பொருள் மற்றும் வன்பொருட்களின் இணைப்பே அதன் உயிர்ப்புக்கு அடிப்படையாகக் காணப்படுகின்றது. உடலும் உயிரும் இணைந்து எவ்வாறு மனிதனை இயக்குகின்தோ அதுபோன்ற அமைப்பிலேயே கணினியும் இவ்விரு பாகங்களினதும் இணைப்பின் மூலம் இயங்குகின்றது. வன்பொருட்கள் கணினியின் செயற்பாடுகளை செய்விக்கின்ற பாகங்களாகவும் அவற்றிற்கான அறிவுருத்தல்களாக மென்பொருட்களும் காணப்படுகின்றன.
இம்மென்பொருட்களின் அடிப்படை தளமாக காணப்படுபவை கணினியின் இயக்கத்தின் பிரதான மூலகரத்தாவாக செயற்படும் இயக்க முறைமைகளாகும். இவ்வியக்க  முறைமைகள் அல்லது பணிச்சயெல் முறைமைகளை பொருத்தவரையில் கணினியை உயிர்ப்பு நிலைக்கு கொண்டு வரும் பிரதான செயற்பாட்டை மேற்கொள்கின்றன. இவற்றின் மீதே நாம் ஏனைய மென்பொருட்களை நிறுவி பயன்படுத்த முடியுமாக உள்ளது.
பிரயோக மென்பொருட்களின் தளமாக அதாவது நாம் நமது தேவைகள நிறைவேற்றிக் கொள்ள பயன்படுத்தும் மென்பொருட்களின் ( உதாரணமாக ஆவணங்களை தயாரிக்க சொல்முறைவழியாக்கல் மென்பொருட்களை பயன்படுத்தல்) தளமாக (Base) இவை காணப்படுகின்றன.
பணிச்செயல் முறைமையின் பிரதான பயன்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
  1. கணினி நினைவகங்களை முகாமை செய்தல் 
கணினியில் காணப்படும் பல்வேறுபட்ட நினைவகங்களை சேமிக்கும் திறன் கொண்ட அமைப்புக்கு மாற்றுவதுடன் அவற்றில் தகவல்களை சேமித்தல், சேமித்தவற்றை முறையாக நிர்வகித்து தேவைப்படும் போது மீள வழங்கள், சேமிப்பகங்களின் கொள்ளளவினை நிர்வாகித்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளல்.
2.        முறைவழி முகாமைத்துவம் செய்தல்
செயன்முறை வழியாக்கல் செயற்பாட்டின் போது தேவையான அறிவுறுத்தல்களை மொழிபெயர்ப்ப செய்து செயலிக்கு வழங்கி கட்டளைகளை நிறைவேற்றிக் கொள்ளல், பல்முறைச் செயற்படுத்தலை சிர்வாகித்தல் போன்ற செயற்பாடுகளை மேற் கொள்ளல்.
3.        துணைச்சாதன முகாமைத்துவம்
கணினியில் இணைக்கப்பட்டுள்ள துணைச் சாதனங்களினை இயக்கி அவற்றுக்கும் பயனாளிக்குமிடையில் பாலமாக தொழிற்படல் அதாவது பயனாளி துனைச்சாதனங்களில் இருந்து உரிய வேலையை பெற்றுக் கொள்ள உதவுதல் மற்றும் புதிதாக இணைக்கப்படும் சாதனங்களை plug and play முறையில் கணினியில் இயங்குநிலைக்குற்பத்தல்.
4.        கோப்பு முகாமைத்துவம் செய்தல்
கணினியில் கானப்படும் பல்வேறு வகையான கோப்புக்களை அதற்குரிய மென்பொருட்களில் திறக்க உதவுதல், கோப்பக்களை சேமிப்பகங்களில் சேமித்தல் அவற்றினை குகோப்புப் பெயர்களின் கீழ் முறையாக கையாளுதல் கோப்புக்களை நீக்கல், மீள் பெயரிடல், கோப்புக்களை பிரதி செய்தல் போன்ற செயற்பாடுகனை மேற்கொள்ளுதல்
பணிச்செயல் முறைமையானது இதன் முக்கியத்துவம் காரணமாக பல அநுகூலங்களையும் கொண்டுள்ளது.
  1. கணினியை இயக்குவதற்கான இடைமுகத்தினை பாவனையாளருக்கு வழங்கள்
  2. கணினியின் அனைத்து உறுப்பக்களையும் ஒருங்கினைத்து செயற்பாட்டு நிலைக்கு கொண்டுவருதல்.
  3. அதன் படவரைவு இடைமுகம் மூலம் இலகுவாக கணினியை பயன்படுத்த உதவுதல்
பணிச்செயல் முறைமையானது அதன் இயல்புகள் மற்றும் கிடைக்கும் முறைகளின் கீழ் பின்வமாறு பாகுபடுத்தப் படுகின்றது.
  1. இயல்பின் அடிப்படையிலான பாகுபாடு
கட்டளைக்கோட்டு இடைமுகம் –Comman Line Interface (CLI)
இங்கு கணினியை உரிய   கட்டளைகளை பாடவடிவில் கொடுப்பதன் ஊடாகவே னநினைவில் வைத்திருக்க வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. உதாரணமாக மெக்ரோ சொப்ட் நிறுவனத்தின் MS DOS
வரைவியல் இடைமுகம் Graphical User Interface (GUI)
இங்கு பயனாளி கட்டளைகளை இலகுவாக பாடங்கள், வரைபுகள், ஐகன்களை கையாள்வதன் மூலம் (சொடுக்கு, இரட்டை சொடுக்கு, தெரிவு, இழுத்துவிடல்) இலகுவாக தமது பணிகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
2.         செலவு  அடிப்படையில் வகைப்படுத்தல்
இலவச சுதந்திர பணிச்செயல் முறைமைகள்
குறித்த பணிச்செயல் முறைமையானது இலவசமாக பெற்றுக் கொள்ள முடியுமாகவும், அதன் குறிமுறைகள் இலவசமாக பெறுதல், மற்றும் பிரதி செய்தல் என்பன சட்டப்படி அனுமதிக்கப்பட்டதுமாக இருப்பின் அது இவ்வகையுள் அடங்கும். இவ்வாறான மென்பொருட்கள் இலவச சுதந்திர மென்பொருட்கள் எனப்படுகின்றன (Free Open Source ) உதாரணமாக லிகன்ஸினுடைய பதிப்புக்களை குறிப்பிடலாம் (Ubuntu, Suse, Fedora, Mint.Chrome OS)
விற்பனை பணிச்செயல் முறைமைகள்
இவை பணம் செழுத்தி பெற்றுக் கொள்ள வேண்டிக் காணப்படுவதுடன் இவற்றின் குறியீட்டு முறைகள் வெளிநபர்களுக்கு வழங்கப்படுவதில்லை, இவற்றை அனுமதியின்றி பிரதி செய்வதும் தடுக்கப்பட்ட பணிச் செயல் முறைமைகள் இவையாகும். உதாரணமாக Microsoft நிறுவனத்தின் Windows பணிச்செயல் முறைமை. (Windows XP, Vista, Windows 7 போன்றவை)
மேலும் பணிச்செயல் முறைமைகள் பதிக்கப்பட்ட (Embedded) முறையில், தனியாக வெளியிடப்படுபவை என்ற வகையிலும் பாகுபடத்தப்படுகின்றன. உதாரணமாக சிலவகை செல்லிடத்தொலைபேசிகளின் பணிச்செயல்முறைமைகளை (SymbianOS, AndroidOS) பதிக்கப்பட்டவற்றுக்கு உதாரணமாகவும், தனியானவற்றுக்கு கணினிகளில் நிறுவப்படும் பணிச்செயல் முறைமைகளையும் குறிப்பிடலாம்.

No comments:

Post a Comment