Links

ITNEWSFIRSTக்கு வரவேற்கின்றோம்

Saturday 9 November 2013

MoreViews Inc.

MoreViews inc. is one of the most popular provider of online media promotional services for business firms,companies, Marketing groups and social media like Facebook, LinkedIn, twitter etc. MoreViews provides superior results, which can be verified by any analytic and tracking tool. Since the beginning, MoreViews has been focused on helping our clients meet and exceed their goals through innovative Search Engine Optimization (SEO) and Social Media Marketing (SMM). Our clients and their satisfaction is our first priority. The vast online testimonials are the evidence of the quality and innovativeness of our service.
their mission
  • To provide effective and innovative approach to Internet Marketing.
  • To foster client loyalty through great results and frank customer support.
  • To achieve the online promotion goals of our clients.
their specialty 
  • Trustworthy Business Ethics
  • Innovative Online Marketing Methods
  • Professional SEO & SMM Practice
  • Affordable Prices
  • Effective Online Promotion Services
To prove thier confidence in the services they  provide, they provide a 100% Service Delivery Guarantee. What does it mean? It simply means that if they don't deliver the service you purchase in a specific time period, you will receive 100% of your money back. No hassels & No hidden fees. they will simply refund upon your request if the service wasn't delivered. For more specific terms on the MoreViews' 100% Service Delivery Guarantee, 

fore more info  Http://www.moreviews.net

Wednesday 12 June 2013

Windows Blue
விண்டோஸ் 8 ன் புதிய பதிப்பு வெளியவந்துவிட்டது!
இது ஏற்கனவே கானப்படும் வின்டோஸ் 8ல் காணப்படும் சிறப்பம்சங்களுடன் மேலும் விஷேட அம்சங்களை கொண்டு காணப்படுகின்றது. 
1. டைல்களின் அளவு
2. புதிய டெஸ்கடொப்
3. Personalization செயற்பாடுகள் 
4. Internet Explorer 11
5. Skydrive
6. புதிய அப்லிகேஷன்கள்

Sunday 3 June 2012

பணிச்செயல் முறைமை


கணினியின் செயற்பாட்டை பொறுத்தவரையில் மென் பொருள் மற்றும் வன்பொருட்களின் இணைப்பே அதன் உயிர்ப்புக்கு அடிப்படையாகக் காணப்படுகின்றது. உடலும் உயிரும் இணைந்து எவ்வாறு மனிதனை இயக்குகின்தோ அதுபோன்ற அமைப்பிலேயே கணினியும் இவ்விரு பாகங்களினதும் இணைப்பின் மூலம் இயங்குகின்றது. வன்பொருட்கள் கணினியின் செயற்பாடுகளை செய்விக்கின்ற பாகங்களாகவும் அவற்றிற்கான அறிவுருத்தல்களாக மென்பொருட்களும் காணப்படுகின்றன.
இம்மென்பொருட்களின் அடிப்படை தளமாக காணப்படுபவை கணினியின் இயக்கத்தின் பிரதான மூலகரத்தாவாக செயற்படும் இயக்க முறைமைகளாகும். இவ்வியக்க  முறைமைகள் அல்லது பணிச்சயெல் முறைமைகளை பொருத்தவரையில் கணினியை உயிர்ப்பு நிலைக்கு கொண்டு வரும் பிரதான செயற்பாட்டை மேற்கொள்கின்றன. இவற்றின் மீதே நாம் ஏனைய மென்பொருட்களை நிறுவி பயன்படுத்த முடியுமாக உள்ளது.
பிரயோக மென்பொருட்களின் தளமாக அதாவது நாம் நமது தேவைகள நிறைவேற்றிக் கொள்ள பயன்படுத்தும் மென்பொருட்களின் ( உதாரணமாக ஆவணங்களை தயாரிக்க சொல்முறைவழியாக்கல் மென்பொருட்களை பயன்படுத்தல்) தளமாக (Base) இவை காணப்படுகின்றன.
பணிச்செயல் முறைமையின் பிரதான பயன்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
  1. கணினி நினைவகங்களை முகாமை செய்தல் 
கணினியில் காணப்படும் பல்வேறுபட்ட நினைவகங்களை சேமிக்கும் திறன் கொண்ட அமைப்புக்கு மாற்றுவதுடன் அவற்றில் தகவல்களை சேமித்தல், சேமித்தவற்றை முறையாக நிர்வகித்து தேவைப்படும் போது மீள வழங்கள், சேமிப்பகங்களின் கொள்ளளவினை நிர்வாகித்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளல்.
2.        முறைவழி முகாமைத்துவம் செய்தல்
செயன்முறை வழியாக்கல் செயற்பாட்டின் போது தேவையான அறிவுறுத்தல்களை மொழிபெயர்ப்ப செய்து செயலிக்கு வழங்கி கட்டளைகளை நிறைவேற்றிக் கொள்ளல், பல்முறைச் செயற்படுத்தலை சிர்வாகித்தல் போன்ற செயற்பாடுகளை மேற் கொள்ளல்.
3.        துணைச்சாதன முகாமைத்துவம்
கணினியில் இணைக்கப்பட்டுள்ள துணைச் சாதனங்களினை இயக்கி அவற்றுக்கும் பயனாளிக்குமிடையில் பாலமாக தொழிற்படல் அதாவது பயனாளி துனைச்சாதனங்களில் இருந்து உரிய வேலையை பெற்றுக் கொள்ள உதவுதல் மற்றும் புதிதாக இணைக்கப்படும் சாதனங்களை plug and play முறையில் கணினியில் இயங்குநிலைக்குற்பத்தல்.
4.        கோப்பு முகாமைத்துவம் செய்தல்
கணினியில் கானப்படும் பல்வேறு வகையான கோப்புக்களை அதற்குரிய மென்பொருட்களில் திறக்க உதவுதல், கோப்பக்களை சேமிப்பகங்களில் சேமித்தல் அவற்றினை குகோப்புப் பெயர்களின் கீழ் முறையாக கையாளுதல் கோப்புக்களை நீக்கல், மீள் பெயரிடல், கோப்புக்களை பிரதி செய்தல் போன்ற செயற்பாடுகனை மேற்கொள்ளுதல்
பணிச்செயல் முறைமையானது இதன் முக்கியத்துவம் காரணமாக பல அநுகூலங்களையும் கொண்டுள்ளது.
  1. கணினியை இயக்குவதற்கான இடைமுகத்தினை பாவனையாளருக்கு வழங்கள்
  2. கணினியின் அனைத்து உறுப்பக்களையும் ஒருங்கினைத்து செயற்பாட்டு நிலைக்கு கொண்டுவருதல்.
  3. அதன் படவரைவு இடைமுகம் மூலம் இலகுவாக கணினியை பயன்படுத்த உதவுதல்
பணிச்செயல் முறைமையானது அதன் இயல்புகள் மற்றும் கிடைக்கும் முறைகளின் கீழ் பின்வமாறு பாகுபடுத்தப் படுகின்றது.
  1. இயல்பின் அடிப்படையிலான பாகுபாடு
கட்டளைக்கோட்டு இடைமுகம் –Comman Line Interface (CLI)
இங்கு கணினியை உரிய   கட்டளைகளை பாடவடிவில் கொடுப்பதன் ஊடாகவே னநினைவில் வைத்திருக்க வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. உதாரணமாக மெக்ரோ சொப்ட் நிறுவனத்தின் MS DOS
வரைவியல் இடைமுகம் Graphical User Interface (GUI)
இங்கு பயனாளி கட்டளைகளை இலகுவாக பாடங்கள், வரைபுகள், ஐகன்களை கையாள்வதன் மூலம் (சொடுக்கு, இரட்டை சொடுக்கு, தெரிவு, இழுத்துவிடல்) இலகுவாக தமது பணிகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
2.         செலவு  அடிப்படையில் வகைப்படுத்தல்
இலவச சுதந்திர பணிச்செயல் முறைமைகள்
குறித்த பணிச்செயல் முறைமையானது இலவசமாக பெற்றுக் கொள்ள முடியுமாகவும், அதன் குறிமுறைகள் இலவசமாக பெறுதல், மற்றும் பிரதி செய்தல் என்பன சட்டப்படி அனுமதிக்கப்பட்டதுமாக இருப்பின் அது இவ்வகையுள் அடங்கும். இவ்வாறான மென்பொருட்கள் இலவச சுதந்திர மென்பொருட்கள் எனப்படுகின்றன (Free Open Source ) உதாரணமாக லிகன்ஸினுடைய பதிப்புக்களை குறிப்பிடலாம் (Ubuntu, Suse, Fedora, Mint.Chrome OS)
விற்பனை பணிச்செயல் முறைமைகள்
இவை பணம் செழுத்தி பெற்றுக் கொள்ள வேண்டிக் காணப்படுவதுடன் இவற்றின் குறியீட்டு முறைகள் வெளிநபர்களுக்கு வழங்கப்படுவதில்லை, இவற்றை அனுமதியின்றி பிரதி செய்வதும் தடுக்கப்பட்ட பணிச் செயல் முறைமைகள் இவையாகும். உதாரணமாக Microsoft நிறுவனத்தின் Windows பணிச்செயல் முறைமை. (Windows XP, Vista, Windows 7 போன்றவை)
மேலும் பணிச்செயல் முறைமைகள் பதிக்கப்பட்ட (Embedded) முறையில், தனியாக வெளியிடப்படுபவை என்ற வகையிலும் பாகுபடத்தப்படுகின்றன. உதாரணமாக சிலவகை செல்லிடத்தொலைபேசிகளின் பணிச்செயல்முறைமைகளை (SymbianOS, AndroidOS) பதிக்கப்பட்டவற்றுக்கு உதாரணமாகவும், தனியானவற்றுக்கு கணினிகளில் நிறுவப்படும் பணிச்செயல் முறைமைகளையும் குறிப்பிடலாம்.

Sunday 27 May 2012

Google Extensions

கூகல் குரோம் இணைய உலாவியை பயன்படுத்துபவர்கள் அதனுடன் இணைந்த வகையில் பயன்படுத்தக் கூடிய பல்வேறுபட்ட நீட்சிகளை (Extensions) கொண்டுள்ளமை அதன் சிறப்பம்சமாகும். இங்கு பல்வேறு தலைப்புக்களின் கீழ் இவை பட்டியலிடப்பட்டுள்ளதுடன் தத்தமது இரசைனைக்கேற்ப இவற்றை பதிவிரக்கம் செய்து குரோமுடன் இணைந்த வகையில் பயன்படுத்தலாம். இவ்வகை நீட்சிகளின் சிறப்பம்சம் குறைந்த கோப்பு அளவினை கொண்டிருப்பதும், இலகுவாக பதிவிறக்கம் செய்யும் வகையிலும் காணப்படுவதாகும்.

17503-chrome_webstore_teaser_super

https://chrome.google.com/webstore?hl=en

Wednesday 2 May 2012

நம்பகமான இணையத்தளமா என அறிந்து கொள்ள...

தாம் பிரவேசிக்கும் இணையத்தளத்தின் நம்பகத்தன்மை பற்றி யாரும் அலட்டிக் கொள்வதில்லை. இதனால் சில வேளைகளில் நாம் நெருக்கடிக்குள்ளாதல் தவிர்க்கமுடியாதது. இப்பிரச்சினையில் இருந்து பாதகாத்துக் கொள்ள உதவும் இணையத்தள தேடு பொறியே WOT ஆகும். இத்தளத்தில் குறித்த தளமுகவரியினை உற்படுத்துவதன் மூலம் அத்தளம் பற்றிய உண்மை நிலையை அறிந்து கொள்ளலாம். மேலும் இங்கு காணப்படும் Add-On புரொகிராமை பதிவிறக்கம் செய்து நிறுவிக்கொள்வதன் மூலம் நாம் பயன்படுத்தும் அனைத்துவிதமான இனையத்தளங்களினதும் நம்பகத் தன்மையை துணியலாம்.
www.mywot.com

INTERNET DOWNLOAD MANAGER

இணையப்பக்கங்களில் இருந்து அனைத்துவிமான பைல் வகைகளையும் இலகுவாகவும் வேகம் குறைந்த இணைப்பின் ஊடாகவும் ஆவகமாக பதிவிறக்கம் செய்து கொள்ள சிறந்த மென்பொருள்

Friday 17 December 2010

கூகளில் தமிழில் Unicode முறையில் தட்டச்சு செய்தல்

கூகளின் தமிழ் மொழியை Unicode  முறையில் இலகுவாக தட்டச்சு செய்வதற்கான வசதியை  Google Transliteration எனும் லேப் வசதி வழங்குகிறது. மேலும் தட்டச்சு செய்த எழுத்துக்களை விரும்பியவாறு மாற்றியமைக்கும் வசதியும்  (Formatting ) இங்கு காணப்படுகின்றது.
பின்வரும் இணைப்பில்  சொடுக்கவும்.

 
 

Thursday 2 December 2010

பயனாளர் பெயர், கடவுச் சொல்லை தவிர்த்து இணையப்பக்கங்களில் நுழைதல்

நாம் இணையப்பக்கமொன்றில் நுழைந்து அங்கு காணப்படும் மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய முயலும் போது பெரும்பாலும் குறித்த தளத்தில் தன்னை பதிவு செய்து கொண்ட பயனாளர்களுக்கே இவ்வகை வசதிகள் காணப்படவதாக அறிவுறுத்துவதைக் காணலாம். இவ்வாறான சந்தரப்பங்களில் பதிவு செய்து பயனாளர் பெயர், கடவுச்சொல் போன்றவற்றை வழங்காது உள்நுளைவதற்கு உதவும் இணையத்தளமே www.bugmenot.com ஆகும். இந்த இணையத்தளத்தில் குறித்த இணையப்பக்கத்தை தேடுதல் மூலம் அதற்கான உள்நுழைதல் விபரங்களை பெற்றுக் கொள்ளலாம்.


Sunday 14 November 2010

கணினி நிகழ்ச்சியொன்றுக்கு செடப் விசாட் ஒன்றை இணைத்தல்

கணினியில் நாம் கணினி மொழிகளை பயன்படுத்தி உருவாக்கிய புரோகிராம்களை இன்னொரு கணினியில் இருவட்டின் ஊடாகவோ அல்லது பென்ட்ரைவின் ஊடாகவோ நிறுவும் போது பல விதமான வின்டோக்கள் தோன்றி எமக்கு வழிகாட்டுவதை காணலாம். இவ்வாறான செட்டப் அமைப்பினை உருவாக்குவதற்கு துணைபுரியும் மென்பொருளே Setup Factory ஆகும். இதனை் பரீட்சாத்த மென்பொருளை பின்வரும் இணைப்பிலிருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம்.


Friday 5 November 2010

நான் யார் நீ யார் நான் யார் நாலும் ‌ெதரிந்தவர் யார் யார் 

Google Crome சேமிக்கப்பட்ட கடவுச் சொல்லை மீளப் பெறுதல்


சில வேளைகளில் கூகல் க்ரோம் இணைய உலாவியை பயன்படுத்தும் நாம் இங்கு நாம் வழங்கும் கடவுச் சொற்களை நினைவில் வைத்திருக்க வேண்டுமா என உலாவி வினவும் போது அவற்றை சேமித்து வைப்பது வழக்கமாகும். பொரும்பாலான சந்தர்ப்பங்களில் இவற்றை மீளப்பெற வேண்டிய தேவை ஏற்பட்டால் அல்லது கடவுச் சொல்லை தெரிந்து கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டால் நாம் தடுமாற்றம் அடையலாம். இதற்கு தீர்வாக பின்வரும் மென்பொருளை பயன்படுத்தி ப் பாருங்கள்.

கணினி வைரசின் வரலாறு


1950
பெல் ஆய்வு கூடமானது ஒருவர் கணினியை மற்றவர் தீங்குவிளைவிக்கும் மென்பொருள்களை கொண்டு தாக்குவதை போன்ற பரீட்சாத்த கணினி விளையாட்டை தயாரித்தல்.
1975
"சைபை" எனும் நுலின் ஆசிரியரான ஜோன பிரன்னர் கணினிகளின் ஊடாக பரவும் ஒருவகை புழுக்கள் பற்றிய கற்பனை கருத்தi முன்வைத்தல்
1984
பிரெட் கொஹென் என்பார் கணினி வைரசு என்ற பதத்தை தனது ஆய்வுக் கட்டுரையொன்றில் முன்வைத்தமை.
1986
முதல் கணினி வைரசான "பிரெய்ன்" பாகிஸ்தானை சேர்ந்த இரு சகோதரர்களால் உருவாக்கப்பட்டது.
1987
உலகலாவிய IBM வலைப்பின்னலை Christmas Tree  எனும் வைரசு செயலிழக்கச் செய்தல்.
1988
அமெரிக்கவின் ARPANET எனும் வலைப்பின்னலில் ஒருவகை வோர்ம் பரவல்
1992
"Michelangelo" எனும் வைரஸ் கணினிகளில் பரவ ஆரம்பித்தமை. இது சில கணினிகளையே பாதித்தமை குறிப்பிடத்தக்கது.
1994
Good Times எனும் வைரஸ் பரவல்
1995
முதல் ஆவண வைரஸ் பற்றிய கருத்தோட்டம் தோற்றம் பெறுதலும், பரவுதலும்.
1998
கணினியின் வன்பொருட்களை செயலிழக்கச் செய்யும்  CIH அல்லது Chernobyl எனப்படும் வைரஸ் பரவுதல்.
1999
E-mail மூலம் பரவும் Melissa எனும் வைரஸ் பரவுதலும் ஈமெயிலை வாசிக்கும் போது தாக்கும் Bubble boy எனும் வைரஸின் பரவுதலும்
2000
Lovebug எனும் பிரபல்யமான வைரஸ் உள்ளங்கை கணினிகளை தாக்கல்
2001
டெனிஸ் வீராங்கனை Anna Kounikova வின் படங்கள் உள்ளதாக குறிப்பிடும் ஒரு வகை வைரஸ் கணினியில் பரவுதல்
2002
Melissa வைரஸை உருவாக்கிய Davi L Smith என்பவர் 20 மாத சிரைத்தண்டனைக்கு உற்படுத்தப்படல்.
2003
Microsoft மென்பொருட்களின் பலவீனமான பகுதிகளின் ஊடாக Sobig எனும் வைரசுடன் இணைந்து Blaster எனும் வைரஸ் கணினிகளில் பரவுதல் இது 2003 ல் ஏற்படுத்திய தாக்கம் மிகவும் பாரியதாக காணப்பட்டது.

Sunday 24 October 2010

விண்டோஸ் எக்ஸ்பீயை ஓன் செய்தவுடன் வரும் Welcome மெசேஜுக்கு பதிலாக வேற சொல்லை வரவைத்தல்

  • இணையத்தில் இருந்து PE Explorer, Resource Hacker போன்ற ஒரு மென்பொருளை டவுன்லோட் செய்துகொள்ளவும்.