Links

ITNEWSFIRSTக்கு வரவேற்கின்றோம்

Friday 5 November 2010

கணினி வைரசின் வரலாறு


1950
பெல் ஆய்வு கூடமானது ஒருவர் கணினியை மற்றவர் தீங்குவிளைவிக்கும் மென்பொருள்களை கொண்டு தாக்குவதை போன்ற பரீட்சாத்த கணினி விளையாட்டை தயாரித்தல்.
1975
"சைபை" எனும் நுலின் ஆசிரியரான ஜோன பிரன்னர் கணினிகளின் ஊடாக பரவும் ஒருவகை புழுக்கள் பற்றிய கற்பனை கருத்தi முன்வைத்தல்
1984
பிரெட் கொஹென் என்பார் கணினி வைரசு என்ற பதத்தை தனது ஆய்வுக் கட்டுரையொன்றில் முன்வைத்தமை.
1986
முதல் கணினி வைரசான "பிரெய்ன்" பாகிஸ்தானை சேர்ந்த இரு சகோதரர்களால் உருவாக்கப்பட்டது.
1987
உலகலாவிய IBM வலைப்பின்னலை Christmas Tree  எனும் வைரசு செயலிழக்கச் செய்தல்.
1988
அமெரிக்கவின் ARPANET எனும் வலைப்பின்னலில் ஒருவகை வோர்ம் பரவல்
1992
"Michelangelo" எனும் வைரஸ் கணினிகளில் பரவ ஆரம்பித்தமை. இது சில கணினிகளையே பாதித்தமை குறிப்பிடத்தக்கது.
1994
Good Times எனும் வைரஸ் பரவல்
1995
முதல் ஆவண வைரஸ் பற்றிய கருத்தோட்டம் தோற்றம் பெறுதலும், பரவுதலும்.
1998
கணினியின் வன்பொருட்களை செயலிழக்கச் செய்யும்  CIH அல்லது Chernobyl எனப்படும் வைரஸ் பரவுதல்.
1999
E-mail மூலம் பரவும் Melissa எனும் வைரஸ் பரவுதலும் ஈமெயிலை வாசிக்கும் போது தாக்கும் Bubble boy எனும் வைரஸின் பரவுதலும்
2000
Lovebug எனும் பிரபல்யமான வைரஸ் உள்ளங்கை கணினிகளை தாக்கல்
2001
டெனிஸ் வீராங்கனை Anna Kounikova வின் படங்கள் உள்ளதாக குறிப்பிடும் ஒரு வகை வைரஸ் கணினியில் பரவுதல்
2002
Melissa வைரஸை உருவாக்கிய Davi L Smith என்பவர் 20 மாத சிரைத்தண்டனைக்கு உற்படுத்தப்படல்.
2003
Microsoft மென்பொருட்களின் பலவீனமான பகுதிகளின் ஊடாக Sobig எனும் வைரசுடன் இணைந்து Blaster எனும் வைரஸ் கணினிகளில் பரவுதல் இது 2003 ல் ஏற்படுத்திய தாக்கம் மிகவும் பாரியதாக காணப்பட்டது.

No comments:

Post a Comment