Links

ITNEWSFIRSTக்கு வரவேற்கின்றோம்

Thursday 26 August 2010

"கூகிள் வரலாறு"



Google ஒரு பிரபல்யமான தேடு பொறியாகும் இதன் வரலாறு இங்கு கட்டுரை மூலமாக உள்ளடக்கப் படுகின்றது.

Google 1996ம் வருடம் ஜனவரி மாதம் ,லாரிபேஜ்(Larry Page)உம் இவரது சக மாணவரான சேர்ஜிபிரின்(Sergey Brin) என்பவரும் தங்கள் கலாநிதிப் பட்டப் படிப்பிற்காக கலிபோர்னியாவிலுள்ள ஸ்ரான்பெஃர்ட்(stanford) பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட ஆராச்சிக்கான தலைப்பு (இணையங்கள் இடையிலான கணித தொடர்பு) இன் முடிவில் தோன்றியதாகும். ஆரம்பத்தில் லாரிபேஜ் இன் ஆராச்சிக்கான விடையமாக மட்டுமே இது இருந்த போதிலும் வெகு விரைவிலேயே சக மாணவரும் நெருங்கிய நண்பருமான சேர்ஜிபிரின் இணைந்து கொண்டார். இவர்கள் இருவரும் தமது ஆய்வை இணைய தேடுபொறிக்கான ஒரு ஆய்வாக முன்னெடுத்தனர். இவர்கள் தாம் சேகரித்த தகவல்களின்படி தேடுபொறியில் தேடப்படும் விடையம் எந்த இணைய பக்கங்களில் உள்ளது என்பதையும் அதன் தொடர்புகளையும் அலசி ஆராய்ந்து தேடுபதிலாக பட்டியலிடுவதே சிறந்த முறை எனவும் முடிவு செய்தனர். இது அப்போது பாவனையில் இருந்த தேடுபொறி தனது தேடும் விடயத்தை எந்த இணையப் பக்கம் அதிகம் கொண்டிருந்ததோ அதன் எண்ணிக்கை வரிசையில் (இறங்கு  வரிசை) பதிலாக (கணனியின் திரையில்) கொடுப்பதை விட, தமது தேடுகருகவியானது தேடிய விடையத்தின் பக்கங்களை அலசி தேடுபதிலாக வழங்கும் முறை சிறப்பான தொழில் நுட்பம் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தார்கள். இவர்கள் தமது ஆராய்ச்சிக்கு புனைப்பெயராக 'பாக்ரப்' (பின்னால் தடவு அல்லது வருடு) என்ற பெயரை சூட்டிருந்ததுடன் இந்த ஆய்வு ஒரு இணையத்தின் பின்புல இணைப்புகளுடன் முக்கிய பங்குவகிப்பதனால் அவ்வாறான அர்த்தத்தில் குறிப்பிட்டனர். இவர்கள் ஆய்வை மிகவும் ஒத்த விதத்தில் தேடு பதிலாலை கொடுப்பதற்கு அந்த காலகட்டத்தில் சிறிய தேடு பொறி "ராங்டெக்ஸ்" (rankdex) வேலைத் திட்டத்தில் இறங்கியும் இருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.

தேடப்படும் விடயம் அடங்கிய இணையப் பக்கங்களினால் அதிகம் எந்த ஒரு இணையப் பக்கம் இணைக்கப் படுகின்றதோ அதுவே தேடப்படும் விடயத்தின் தொடர்பான பதில் என தமது ஆராச்சியை நியாயப்படுத்தினர். இந்த ஆராச்சி ஸ்ரான்பேஃர்ட்(stanford)பல்கலைக்கழக பட்டப் படிப்புடன் சம்பந்தமான ஆராச்சி என்பதால் தமது விதிகளை அங்கு பரீட்சித்தும் பார்த்ததோடு Google தோன்றவும் அடிகோலினர்.

ஆரம்பத்தில் ஸ்ரான்பேஃர்ட் பல்கலைகழகத்தின் இணையப் பக்கங்களை தேடுவதற்க்காக "google.stanford.edu" என்ற பெயர் பாவிகப்பட்ட போதிலும் பின்னர் google.comஎன 1997ம் வருடம் செப்ரம்பர்15ம் நாள் பதிவு செய்யப்பட்டதுடன் 1998ம் வருடம் செப்ரம்பர் 15ம் நாள் Googleதனியார் நிறுவனமாகவும் பதியப்பட்டது.1998ம் ஆண்டு செப்ரம்பர் 7இல் நண்பர் ஒருவரின் cargrageல் Google வர்த்தக நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. புதிய நிறுவனத்திற்கு முதலிடுவதில் பலரையும் அணுகி ஒரு வழியாக இறுதியில் 1.1 மில்லியன் டொலர்களை சேர்த்து கொண்டனர். மேலும், இவர்கள் ஆரம்பத்தில் மிக தீவிரமாக googol.com என பெயர் சூட்டுவதில் மிகுந்த ஆர்வமாக இருந்தனர்

(googol என்பதன் அர்த்தம் 1 ஐ தொடர்ந்து வரும் 100 பூச்சியங்கள் கொண்ட எண்ணைக் குறிக்கும் பெயராகும். ஆனால், அது சிலிக்கன் பள்ளத்தாக்கு பொறியியலாளர் ஒருவரால் ஏற்கனவே பதிவுசெய்யப் பட்டிருந்ததுடன் அந்தபெயரை அவர் அப்போது விட்டுக் கொடுக்கவும் சம்மதிக்கவில்லை.) எனவே, இவர்கள் தமது நிறுவனத்திற்கு தீவிரமாக பெயர் தேடும் போது தவறுதலாக தட்டச்சு செய்தபோது பிறந்ததே "Google" என்ற புதிய சொல். car grageல் இருந்து இந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் 1999 ம் மார்ச் மாதம் சிலிக்கன்-பள்ளத்தாக்கு(SiliconValley) இற்கு மாற்றலாகின. அங்கு வெவ்வேறு இரு இடங்களில் Google இயங்கிய போதிலும் விரைவான வருவாய்,வளர்ச்சி காரணமாக பெரிய கட்டிட தொகுதிக்கு வாடகை அடிப்படையில் 2003இல் மாற்றலாயிற்று. அன்றிலிருந்து அதே இடத்திலேயே இருப்பதுடன் அக் கட்டிடத் தொகுதி googleplex எனவும் பெயர் பெற்றது. பின்பு 2006இல் 319 மில்லியன் டொலர்களை கொடுத்து அந்த கட்டிடத்தொகுதியை Google கொள்முதல் செய்தும் குறிப்பிடத்தக்கது.

Google தனது எளிமையான தேடி மூலமாக அடிக்கடி உபயோகிக்கும் இணைய பாவனையாளர்களுடன் புதிது புதிதாகவும் பலரையும் கவரத் தொடங்கியது. தேடுபொறியில் தேடப்படும் சொற்களுடன் தொடர்பான விளம்பரங்களை 2000ம் ஆண்டில் இருந்து Google சேர்க்கத் தொடங்கியதோடு விளம்பரங்கள் இணைப் பக்கங்களின் அமைப்பை குலைக்காமலும், இணைப் பக்கங்கள் கணனி திரைகளில் விரைவாக தோன்று வதற்காகவும் ஆரம்பத்தில் எழுத்துருக்களில் மட்டும் வடிவமைக்கப் பட்டிருந்தன. தேடுபொறியில் தேடலை ஒத்த விளம்பரங்கள் கேள்வி மூலமாக அல்லது சொடுக்கப்படும்(click)விகிதத்திலும் விற்கப்படுவதுடன் இவற்றின் ஆரம்ப விலை 0.05 டொலராகவும் உள்ளது. இந்த தேடு விடையத்தை ஒத்த விளம்பரத்தினை இணையத் தளங்களில் காண்பிக்கும் நுட்பத்தில் goto.com என்ற நிறுவனமே முன்னோடிகளாக இருந்தார்கள். (goto.com என்ற இதன் பெயர் overtrue services வாகவும் பின்நாளில் Yahoo! இனால் கொள்முதல் செய்யப்பட்டு "யாகூ சேர்ச் மாக்கெற்ரிங்" எனவூம் ஆயிற்று.). கூகிளுடன் போட்டியாக பல புதிய நிறுவனங்களும் இணையத்தள சந்தையில் தோற்றுவிட "கூகிள்" லாபமீட்டுவதுடன் உறுதியாக  வெற்றியீட்டி வருகிறது.

ஆரம்பத்தில் "கூகோல்"(googol) என்பது அதன் அர்த்தம் கண்டு விரும்பப் பட்ட போதிலும் எழுத்துப் பிழைகளுடனான "கூகிள்"(Google) என்பது மிக பிரபல்யம் ஆயிற்று. இன்று பெரும்பாலும் ஒவ்வொரு மொழியிலும் அதிகம் பேசப்படும் வினைச் சொல்லாக மாறி விட்ட இதை ஒக்ஸ்பேஃர்ட் அகராதி 2006இல் சேர்த்ததுடன் அதனை 'கூகிள் தேடுபொறி இணையத்தில் தகவல் பெற பாவிக்கப்படுகின்றது.' என அர்த்தப் படுத்தியும் உள்ளது.  கூகிள் தேடுபொறி(googlesearch) தேடுதலுக்கான பட்டியலிடும் தொழில் நுட்பமானது 2001ம் செப்ரம்பர் 4ம் திகதி (PageRankmechanism) காப்புரிமம் செய்யப் பட்டதுடன் ஸ்ரான்பேஃர்ட் பல்கலைக்கழக அதிகாரபூர்வ கண்டுபிடிப்பாளர் காப்புரிமத்திலும் பட்டியலிடப் பட்டுள்ளது.

1 comment: