Links

ITNEWSFIRSTக்கு வரவேற்கின்றோம்

Saturday 16 October 2010

கணினிப் பாகுபாடு Computer Classification

தற்காலத்தில் கணினிகள் இல்லாத வீடுகளையோ வியாபார நிறுவனங்களையோ கான்பது மிக அரிதானதாகும்.கணினியின் மூலம் உரிய பயனை பெறுகின்றோமோ இல்லையோ கணினியை வைத்திருக்கின்றோம். ஏதோ பாவிக்கின்றோம். எனினும் நான் இங்கு குறிப்பிட நினைப்பது அதுவல்ல மாறாக இன்று உலகில் பயன்படுத்தப்படும் கணினிகளின் வகைகள் எவ்வரானவை என்பதாகும். கணினிகள் பின்வரும் அமைப்பில் பாகுபாடு செய்யப்படுகின்றன.


தலைமுறை அடிப்படையிலான பாகுபாடு

    முதலாம் தலைமுறை கணினிகள்:
    இவை 1950 களில் உருவாக்கப்பட்ட கணினிகளாகும். இவற்றின் சுற்றுக்களில் வெற்றுக் குழாய்கள் (Vacuum Tubes) எனும் ஒரு வகை தொழினுட்பம் பயன்படுத்தப்பட்டது. இவ்வெற்றுக் குழாய்களுக்குப் பதிலாகவே பின்னர் திரான்ஸிஸ்டர்கள் (Transistor) பயன்படுத்தப்பட்டன. உதாரணமாக Electronic Numerical Integrator and Computer (ENIAC) குறிப்பிடலாம். 





    இரண்டாம் தலைமுறை கணினிகள்: 1056 தொடக்கம் 1963 வரை உருவாக்கப்பட்ட கணினிகள் இத்தலைமுறைக்குரிய கணினிகளாகும் இவற்றின் சுற்றுக்களில் திரான்ஸ்ஸிஸடர் தொழினுட்பம் பயன்படுத்தப்பட்டது.    இவை முதலாம் தலைமுறை கணினிகளை விட செயற்திறன் கூடியவையாகவும் அளவில் ஒப்பீட்டு ரிதியில் சிறியனவாகவும் காணப்பட்டன. உதாரணமாக IBM 1401




      மூன்றாம் தலைமுறை கணினிகள்: 1964 தொடக்கம் 1971 வரையான
      காலப்பகுதியை கொண்டது. இத்தலைமுறை கணினிகளில் ஒன்றிணைந்த சுற்றுக்கள் தொழினுட்பம்( Itergrated Circuits Or IC)       பயன்படுத்தப்பட்டது. இதன்காரணமாக செயற்திறன் அதிகரித்துடன் அளவிலும் முன்னைய தலைமுறையை விட கணினிகள் சிறியதாக மாறியது.  




      நான்காம் தலைமுறை கணினிகள்
      இத்தலைமுறை 1971 தொடக்கம் தற்போதைய காலம வரை தொடர்கின்றது.இவற்றின் மிசுற்றுக்களில்  நுண்சில்லுகள் அல்லது முறைவழியாக்கிகள் (Micro Processor) எனும்  ழினுட்பம் பயன்படுத்தப்படுகின்றது. இதன் காரணமாக  இக்கணினிகள் அளவில் மிகவும் சிறியனவாக மாறியதுடன் மிகக் கூடிய செயற்திறனையும் கொண்டுள்ளமை முக்கிமாகும். உதாரணமாக
      INTEL PENTIUM COMPUTERS

                   

      ஐந்தாம் தலைமுறை கணினிகள்
      இவை எதிர்காலத்தில் பயன்படத்தப்படவுள்ள கணினிகளாகும். இவை செயற்கை நுண்ணறிவு எனும் அடிப்படையில் இயங்கக் கூடியவை.இவை மனிதனை போன்று சிந்தித்து செயலாற்றும் தன்மையை பெற்று செயற்படும் கணினிகளாக கருதப்படுகின்றன. பரீட்சிப்பு மட்டத்தில் இவை தற்போது . காணப்படுகின்றன. உதாரணமாக விசேட தேவைகளுக்கு பயன்படத்தப்படும் ரோபோக்கள்.



       அளவின் அடிப்படையிலான பாகுபாடு
      இன்று நாம் பயன்படுத்தும் கணினிகள் அவற்றின் அளவுகளுக்கேட்ப பின்வருமாறு பாகுபடுத்தப்படுகின்றன.

      சுப்பர் கணினிகள்:
      பாரிய தரவுகளைக் கையாளும் திறன் கொண்ட, அளவில் பாரிய, விலையுயர்ந்த, விசேட தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் கணினிகள் இவையாகும். திரில்லியன் கணக்கான செயற்பாடகளை மேற்கொள்ளும் ஆற்றல் கொண்ட இவை வீடுகளிலோ நிறுவனங்களிலோ பயன்படத்தப்படுவதில்லை இதற்கான பிரான காரணம் இவற்றின் விலையாகும். இவை தனியாக பயன்படுத்ப்படாது பல நாடகளுக்கிடையே பகிரப்பட்ட (Sharing) அமைப்பிலேயே பயன்படத்தப்படுகின்றன. உதாரணமாக Cray -1



      மெயின் பிரேம் கணினிகள்:
      பல்லாயிரக்கஒக்கான தரவுகளை கையாள முடியுமான இக்கணினிகள் சுப்பர் கணினிகளுக்கு அடுத்ததாக உலகில் காணப்படும் சக்திவாய்ந்த கணினிகளாகும். இவை பாரிய வைத்தியசாலைகள் வின்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.

      மினிக் கணினிகள்:
      மெயின் பிரேம் கணினிகளை விட தரத்தில் குறைந்தவை பல்கலைக்கழகங்கள் சாதாரண நிறுவனங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும் இணையத்தில் வழங்கிகளாக பாவிக்கப்படுகின்றன.
      மைக்ரோ கணினிகள்:
      இவை தனிநபர் பாவனையைக் கொண்ட ஒரே நேரத்தில் ஒருவர் மட்டும் பயன்படுத்த முடியுமான கணினிகளாகும். பொதுவாக இவை அனைவராலும் PCக்கள் என அழைக்கப்படுகின்றன. இவை பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.

      1. Desktop:  
      வீடுகள், நிறுவனங்களில் மேசை மேல் வைத்து பயன்படுத்த முடியுமான கணினிகளாகும். இவை பல்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன.


      2. Laptop:
      இடத்துக்கிடம் எடுத்துச் செல்ல முடியுமான ஒரு குறிப்பிட்ட நேரம் வரையில் மின்கலத்தின் உதவியுடன் இயங்க முடியுமான கணினிகள் இவையாகும் மடிமீது வைத்து பாவிக்கக்கூடிய அமைப்பில் இவை காணப்படுவதால் மடிக்கணினிகள் எனப்படுகின்றன. இற்றில் சிற்சில சிறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு அவை Note Book, Tablet PC போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றன. 



      3. Palmtop:
      உள்ளங்கையில் வைத்துப் பயன்படுத்தக்கூயெ அளவில் சிறிய கணிகளாகும். இவை தனிநபர் இலக்க உதவியாளர் எனவும் அழைக்கப்படுகின்றன(Personal Digital Assistant or PDA). அவை சாதாரன கணினிகளில் மேற்கொள்ளும் செயற்பாடுகள் அனைத்தையும் மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்படவில்லை எனினும் அடிப்படையான சில செயற்பாடுகளை நிறைவேற்றும் வகையிலேயே காணப்படுகின்றன.

      பயன்பாட்டின் அடிப்படையிலான பாகுபாடு

      1. பொதுவான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் கணினிகள்
      2. விசேட தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் கணினிகள்
      யுத்த நடவடிக்கைகள், அகழ்வாராய்ச்சிகள், வின்வெளி ஆய்வுகள்,இணைய வழங்கிகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் கணினிகள்

      1 comment: