Links

ITNEWSFIRSTக்கு வரவேற்கின்றோம்

Saturday 16 October 2010

Add remove Program மூலம் நீக்க முடியா மென்பொருட்களை நீக்கல்

கணினியில் நிறுவப்பட்டுள்ள சில மென்பொருட்களை வழமையாக நாம்  நீக்குவது போன்று Add/Remove Program மூலம் நீக்க முடியாது போகலாம்.இவ்வாறான சந்தர்ப்பங்களில் பின்வரும் வழிமுறையை கையாள்வதன் ஊடாக இலகுவாக அவற்றை நீக்கலாம்.



குறித்த புரோகிராம் காணப்படும் போல்டரை அழித்தல்
முதலில் குறித்த புரோகிராம் காணப்படும் C Drive ல் சென்று அங்கு காணப்படும் Program Files போல்டரில் தேடி அழித்தல் வேண்டும்.

Registry ல் காணப்படும் பகுதிகளை அழித்தல்
இதற்கு பின்வரும் படிமுறையை கையாளவும்




  1. Registry Editor ல் HKEY_LOCAL_MACHINE போல்டருக்கு சென்று அதில் Software என்பதில் Microsoft இனை தெரிவு செய்து Windows என்பதில் Current Version\Uninstall என்பது தெரிவு செய்யப்பட்டிக்கையில் Edit Menu வில் Find என்பதை தெரிவு செய்யவும்.பின்னர் கிடைக்கும் "Find what" Dialog box ல் ஏற்கனவே அழித்த Folder ன் பெயரை டைப் செய்து Find next இனை Click செய்யவும்.
  2. சில மென்பொருட்கள் Service வடிவில் Registry உடன் தொடர்புபட்டிருப்பதால் Registry  ல் அவற்றை நீக்க HKEY_LOCAL_MACHINE ல் System என்பதை தெரிவு செய்யவும்.
  3. அங்கு CurrentControlSet எனவும் அதில் Services  எனவும் தெரிவு செய்யவும்.அங்கு குறிப்பிட்ட புரோகிராமுக்குரிய போல்டர் தென்பட்டால் அதை Delete செய்துவிடவும்

எஞ்சிய ஏனைய பைல்களை Windows Explorer மூலம் அழித்தல்

  1. குறித்த புரோகிராமுக்குரிய குறுக்கு வழிகளை C Drive Documents and setting All Users Start Menu Program போன்றவற்றில் தேடி அழிக்கவும்.
  2. இதேபோல் C:\Documents and Settings\Administrator\Start Menu\Programs ல் சென்று அங்கு குறுக்கு வழிகள் காணப்பட்டால் அவற்றையும் அழித்துவிடவும் 
  3. பின்னர் Document and setting ல் சென்று All userன் கீழ் ஒவ்வொருவருக்குமுரிய போல்டரினுள் சென்று குறுக்கு வழிகளை அழித்து விடவும்.

No comments:

Post a Comment