Links

ITNEWSFIRSTக்கு வரவேற்கின்றோம்

Tuesday 19 October 2010

Windows Xp ல் போல்டரை லொக் செய்தல்

Windows Xp இயக்க முறைமை உள்ள கணினியில் நாம் உருவாக்கிய ஒரு போல்டரை லொக்செய்யும் வசதி காணப்படுகின்றது. இதனை செயற்படுத்த பின்வரும் படிமுறைகளை கையாளவும்.


1. லொக் செய்ய வேண்டிய போல்டர் காணப்படும் பிரதான போல்டரினுள் செல்லவும்.உதாரணமாக நாம் லொக் செய்யவிருக்கும் போல்டர் myfolder இனுள் காணப்படின் myfolder போல்டரை திறந்து கொள்ளவும். (இங்கு Usersஎன்ற போல்டர் Lock செய்ய பயன்படுத்தப்படுகின்றது)
Figure 1



2. அதில் Note Pad இனை திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்.
ren Users Users.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}என Type செய்து loc.bat    என்ற பெயரில் சேமிக்கவும்.இது குறித்த போல்டரை லொக் செய்வதற்கான கோப்பாகும்.

3. பின்னர் அதே இடத்தில் இன்னொரு Note Pad ஐ திறந்து இதில்ren Users.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} Users  என Type செய்து key.bat என்ற பெயரில் குறித்த இடத்தில் (myfolderனுள் )சேமிக்கவும்.இது லொக் செய்த போல்டரை திறப்பதற்கான கோப்பாகும்.

Figure 2

4. தற்போது loc.bat மீது Click செய்யவும் Users போல்டர் Control Panel ஐகனை பெற்று விடும் அதாவது லொக் செய்யப்படடுவிடும்.

5. பின்னர் key.bat ஐ click செய்வதன் மூலம் Users போல்டரை திறந்து கொள்ளலாம் 

Figure 3

No comments:

Post a Comment